ரஷ்யா விமானத்திற்கு இப்படி ஒரு சோதனையா??

Ural Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Airbus 321 ரக ரஷ்யா விமானம் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது பறவைகள் அதில் மோதி கொண்டுள்ளனர். இவ்வாறு மோதிய பறவைகள் விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் சிக்கி கொண்டதால் அவசரமாக விமானம் தரையிறங்க நேரிட்டது.  இந்த விமானத்தில் 233 பயணிகள் இருந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே பறவைக் கூட்டத்தை எதிர் கொண்டது விமானம்.
இந்த பறவைகளில் சில விமானத்தின் இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டதால் அது ஸுகோவ்ஸ்கி (Zhukovsky) அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சோளத் திடலில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களில் நான்கு பயணிகளுக்கு மட்டும் லேசான காயங்களோடு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!