" "" "

வினிகர் (வினாகிரி) சிறிதளவு எடுத்து உங்கள் உடலில் பூசிக்கொள்ளுங்கள்..ஏன் தெரியுமா இதை படித்து பாருங்கள்..!!

கோடை காலம் வந்தால் எந்த தொல்லை வருகிறதோ இல்லையோ வியர்வை பரு, வியர்வை நாற்றம், சிறு நீர் கடுப்பு, இவை மூன்றும் எங்களை தொல்லை செய்ய ஆரம்பித்துவிடும். குறிப்பாக வேர்வை நாற்றம் தான் அதிக பிரச்சனையாகிவிடும். வாசனை திரவியங்கள் சில மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும்.

இதனால் நண்பர்கள், வேலை செய்யும் இடங்கள், விஷேடங்கள் இப்படி பல இடங்களில் அவமானப் பட நேரிடும். இதற்கு என்ன செய்வது? எப்படி தீர்ப்பது என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.?ரோஜா பூவை எடுத்து நன்றாக அரைத்து அக்குள் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி 10 நிமிடம் விட்டு பின் குளியுங்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வியர்வை பருக்கள் வருவது நின்று விடுவதோடு நாற்றமும் வராது. வெளியே செல்வதற்கு முன் உருளை கிழங்கு ஒன்றை சரி பாதியாக வெட்டி ஒரு பாதியை வியர்வை அதிகமாகும் பகுதியில் தேய்த்து விட்டு கழுவி விட வியர்வை நாற்றம் வீசுவது குறைந்து விடும்.

சிலருக்கு உள்ளங்கை உள்ளங்கால் போன்றவை வியர்த்துக் கொண்டே இருக்கும், இதற்கு தேசிக்காய் பாதியை பிழித்து அதன் ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து உறங்கும் முன் உள்ளங்கை உள்ளங்காலில் பூசி வர வியர்வை சில நாட்களிலேயே நின்று விடும். வினிகர் என்று சொல்லப் படுகின்ற வினாகிரி சிறிதளவை வியர்வை வரும் இடத்தில் பூசு பின் கழுவி விட்டு வெளியே சென்றால் வியர்வை கசிவு குறைவதோடு நாற்றமும் வராது.!