வன்முறையாக மாறிய வேலைநிறுத்தப் போராட்டம்!

இந்தியா முழுவதும் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப்போராட்டம், மேற்குவங்கத்தில் வன்முறையாக மாறியதையடுத்து பொலிஸார் பலரைக் கைதுசெய்துள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் அரசு பஸ்கள், பொலிஸ் வாகனம் உள்ளிட்ட அரசு சொத்துகளைச் சேதப்படுத்தினர். அதுமாத்திரமின்றி ரயில் மறியல்களும் ஈடுபட்டனர்.

அத்துடன், வேலைநிறுத்தப் போராட்டத்தை 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் முயற்சியாக, சில பகுதிகளில் கடைகளைத் திறக்க விடாமல் தடுத்தும், முக்கிய வீதிகளை மறித்தும் போராட்டங்களை நடத்தினர்.

அதேவேளை, டயர்களைக் கொளுத்தி வீதிகளில் வீசியதுடன், பொலிஸ் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் பல தீ மூட்டப்பட்டன.

இதையடுத்து மால்டா, சுஜாபூர் பகுதியில் பொலிஸார் வன்முறைகளைத் தடுக்க முயன்றபோது, அவர்களை நோக்கி கற்கள் மற்றும் நாட்டுக் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பலரைக் கைதுசெய்தனர்.

இதனால், மேற்கு வங்கத்தில் இன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.