இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஜோடிக்கு சற்று முன்னர் குழந்தை பிறந்தது..! என்ன குழந்தை தெரியுமா.!!?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா ஜோடிக்கு சற்றுமுன்னர் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான விராட் கோலி நடிகை அனுஷ்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் காதல் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் சர்ச்சைக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து இரண்டு ஆண்டுகளின் பின் அனுஷ்கா கர்ப்பமாக இருந்தார். குழந்தை பேற்றுக்காக மனைவியுடன் இருக்க கோலி விரும்பினார்.
அதற்காக ஆஸ்திரேலிய டூரில் இருந்து விடுமுறை எடுத்து வீடு சென்றார். இந்த நிலையில் இன்றைய தினம் அனுஷ்கா விராட் கோலி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.! இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.!!