" "" "

கொரோனா வைரஸில் இருந்து சீக்கிரமே குணமடைந்த விஷால், பயன்படுத்திய மருந்து இவை தானாம்..! விஷால் வெளியிட்ட மருந்துகள்..!!

கொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப் படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றது, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தற்போது வெற்றிபெற்று வந்தாலும் இவை பாவனைக்கு வர சில வருடங்கள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, வேகமாக பரவி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலி எடுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 17 நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டனர்.

ஆனால் இவர்கள் வைத்தியசாலைகளில் அல்லது தனிமை படுத்தல் நிலையங்களில் இருக்காமல் வீட்டிலேயே ஆயுர்வேத மருத்துவம் செய்து குணமடைந்துள்ளனர். இதனை நேற்றைய தினம் விஷால் அறிவித்ததை தொடர்ந்து விஷால் பயன்படுத்திய மருந்தை அறிந்துகொள்ள பலர் ஆசைப் பட்டதுடன் விஷாலிடம் கேட்டு வந்தனர்.

இன்றைய தினம் தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட்ட விஷால் வைத்திய ஆலோசனையுடன் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..!!