" "" "

கொடூர கணவனின் பேராசையால் திருமணமாகி சில மாதங்களிலேயே மரணமடைந்த 24 வயது டாக்டர்.! உடல் முழுவதும் காயத்துடன் மீட்கப் பட்ட சடலம்.!!

திருமணமாகி ஒருவருடம் கூட நிறைவடையாத நிலையில் பெண் மருத்துவர் ஒருவரின் மர்ம மரணம் அவரது கணவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் விஸ்மிகா. இவர் அதே பகுதியில் ஆயுர்வேத மருத்துவராக பணி புரிந்து வருகின்றார். கல்லூரி படிப்பை முடித்து பணிக்கு சென்ற மகளுக்கு விஸ்மிகாவின் பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த கிரண்குமார் நாயர் என்ற நபருக்கு திருமண நிச்சயம் செய்து கடந்த வருடம் திருமணம் செய்து வைத்தனர்.

சுமார் 102 சவரன் நகை, 1.5 ஏக்கர் காணி, 11 லட்சம் பொறுமதியான கார் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப் பட்டது. ஆனால் திருமணமாகி சில மாதங்களிலேயே தங்கள் கவுரவத்திற்கு இந்த கார் அவமானமாக இருக்கிறது என கூறி விஸ்மிகாவிடம் வேறு கார் வேண்டும் என கிரண்குமார் கூறி பெற்றோரை கேவலமாக விஸ்மிகாவிடம் கூறி உள்ளார். தனது தாய் தந்தை கடன் வாங்கி தான் வரதட்சணை கொடுத்தனர் என்றும் இதற்கு மேல் கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் கிரண் குமார் மிக மோசமாக விஸ்மிகாவின் பெற்றோர் பற்றி திட்டியுள்ளார். இதனால் தாய் தந்தைக்கு ஆதரவாக பேசிய விஸ்மிகாவை மிக மோசமாக அடித்து காயப்படுத்தியுள்ளார். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்த விஸ்மிகா 6 மாதத்தில் வாழ்வது கடினம் என முடிவு செய்து தாய் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் கிரண்குமார் அங்கு அவரை இருக்க விடவில்லை.

மாமனார் வீட்டிற்கு சென்று நல்லவர் போல் நடித்துள்ளார், கிரண்குமாரின் உண்மை முகம் அறியாத பெற்றோர் மீண்டும் விஸ்மிகாவை கிரண்குமாருடன் அனுப்பியுள்ளனர். பெற்றோரின் மனதை கஷ்டபடுத்த விரும்பாத விஸ்மிகா கணவருடன் சென்றுள்ளார். மீண்டும் தனது கொடூர முகத்தை காட்டிய கிரண்குமார் விஸ்மிகாவை வேலைக்கு செல்ல விடாமல் அடித்து துன்புறுத்தியதுடன் காயப்படுத்தியுள்ளார்.

கணவர் தன்னை கொலை செய்து விடுவார் என நினைத்த விஸ்மிகா உடலில் உள்ள காயங்களை புகைப்படம் எடுத்து வாட்சப் மூலம் தாய் தந்தைக்கு அனுப்பியதுடன் தனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி கூறியுள்ளார். அத்துடன் இது பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என கூறிய விஸ்மிகா தொடர்ந்து தொல்லை செய்தால் தாய்வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். பெற்றோர் மகளை உடனடியாக வரும்படி கூறிய போதும் மறுத்த விஸ்மிகா அவர்களையும் கணவர் வீட்டுக்கு வந்து அவமானப் பட வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் விஸ்மிகா தனது அறையில் மர்மமாக இறந்து கிடந்ததாக கிரண்குமார் பொலீஸாருக்கு அறிவித்ததுள்ளார். சடலத்தை கைபற்றிய பொலீஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஸ்மிகாவின் தந்தை தனது மகள் அவரது கணவரால் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் மகளின் மரணத்தில்
சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.!