" "" "

வெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை வனிதா.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகை வனிதா. வனிதா என்ன செய்தாலும் இறுதியில் சர்ச்சையில் முடிவதால் இணையத்தளங்களில் அவர் பற்றிய செய்திகளே அதிகம் பகிரப் படுகின்றது. அந்த வகையில் நேற்றைய தினமும் வனிதா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வனிதாவின் திருமணங்கள், காதல், மட்டும் இன்றி சொத்து தகராறு காரணமாக அவரது குடும்பத்தினர் யாரும் வனிதாவை கண்டுகொள்ளவதில்லை, அத்துடன் குடும்பத்தில் இருந்தே ஒதுக்கி வைத்துள்ளனர். வனிதாவின் தந்தையான விஜயகுமார் அவர்கள் வனிதா என் மகளே இல்லை என கூறிவிட்டார்.

ஆனால் வனிதாவோ விஜய்குமாரை விடுவதாக இல்லை, அவரது பெயரை பயன்படுத்துவதுடன் அடிக்கடி அவரை நினைவு படுத்திக்கொண்டிருப்பார். அந்த வகையில் வனிதா நேற்று பதிவிட்ட புகைப்படம் ஒன்று பலரால் திட்டி தீர்க்கப் படுகின்றது.

ஜோடி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடலில் விஜயகுமார் வரும் காட்சியின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட வனிதா இது தான் டிஎன்ஏ என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் தந்தையை எப்போதும் அவமானப் படுத்திக்கொண்டே இருக்கின்றீர்கள் என கூறி வருகின்றனர்.!