" " " "

திருமண தோஷங்கள் நீங்கி நல்லவரன் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்..! அனைவரும் அறிய பகிருங்கள்…!!

இன்றைய ஆன்மீக தகவல்கள் பகுதியில் சில தோஷ நிவர்த்தி பரிகாரங்களை பார்க்கப் போகின்றோம். பெற்றோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பிள்ளைகளின் திருமணங்கள். 30 வயதை கடந்த பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பார்கள் , ஆனால் நல்ல வரன்கள் அமையாது. இதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இன்று நாம் பார்க்கப் போவது திருமண தோஷங்கள் நீங்கு நல்ல வரன் கிடைக்க செய்ய வேண்டியவை தான். தினமும் காலை எழுந்து குளித்து விட்டு இறைவனை வணங்கும் போது ” ஓம் நமச்சிவாய ” என 108 முறை சொல்லி வாருங்கள். அத்துடன் பிரதோஷ நாளில் சிவ ஆலயங்களில் வீற்றிருக்கும் நந்திபகவானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.

பிரதோஷ நாள் அன்று நந்தி பகவானுக்கு நாம் செய்யும் அபிஷேகங்கள் இறைவனுக்கு நேரடியாக செல்கின்றது என்பது ஐதீகம். அத்துடன் அன்றைய தினம் நமது பிரார்த்தனைகள் நிறைவேற்றப் படுவதாக குறிப்பிடுகின்றனர்..!

வீட்டில் தீராத சண்டை, எவ்வளவு தான் உழத்தாலும் நிம்மதி சந்தோசம் எட்டாக் கனியாகவே இருக்கிறது, வீட்டில் ஒரே நோய் என முணங்கிக் கொண்டிருப்பவர்கள் அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து வருங்கள். அதாவது அரிசி வடித்த கஞ்சி, தவிடு அல்லது அகத்திக் கீரை போன்றவற்றை உணவாக அளியுங்கள்,இது உங்களுக்கு ஏற்படும் எண்ணிலடங்கா கஷ்டங்களுக்கு தீர்வாகிறது..!