தூங்க முடியாமல் படுக்கையில் தவிக்கிறீர்களா..!? படுத்தவுடன் உறங்க இதை மட்டும் செய்யுங்கள்…!!

அதாவது விஞ்ஞான விளக்கத்தின்படி நேர்மறையான சிந்தனைகள் என்பவை நம் மனதை அமைதி நிலைக்கு இட்டுச்சென்று முழு உடலுக்குமே ஓய்வைக் குடுக்கவல்லனவாம். எனவே நாளை நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள், அதற்காக  எப்போது கண்முழிக்கப்போகின்றீர்கள் என்பது பற்றி உங்கள் சிந்தனையைச் செலுத்திக்கொண்டே இருங்கள். சிறிது நேரத்தில் உங்களை அறியாமல் உறங்கிப் போவீர்கள்.ஏதாவது ஒரு விடயத்தின் மீது கவனத்தை குவியுங்கள்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

துக்கம் இல்லாமல் புரள்கின்றபோது மனம் அங்குமிங்கும் அலைபாயும். அவ்வாறு மூளை வேலை செய்துகொண்டிருக்கும்போது கண்கள் உறங்க மறுக்கும் ஆகவே உங்கள் முழுக் கவனத்தையும் எண்களின்மீதோ நல்ல பாடல்களின் மீதோ அல்லது சிறிய மந்திரங்களின் மீதோ போட்டு விடுங்கள். இரண்டு நிமிடத்தில் தானாகவே உறங்கிவிடுவீர்கள்.புத்தகங்களை எடுத்துப் புரட்டுங்கள்.

அட புத்தகங்களை என்றதும் ஓடிவிடாதீர்கள். உங்களை நிஜமாகவே படிக்கச் சொல்லவில்லை.  புத்தகங்களைப் புரட்டிக் கொண்டே கண்களை எழுத்தின் மேல் படரவிட்டாலே போதும். மெல்லிய வெளிச்சம் தரும் இதம் புத்தகத்தின் மேல் மொய்க்கும் பார்வை ஆகிய இரண்டும் உங்களுக்கு சுகமான உறக்கத்தை கொடுக்கும்.

மெல்லிய இசையை காதுக்குள் ஒலிக்கவிடுங்கள்.பாடல்கள் என்று இங்கு சொல்லவில்லை ஒரே மாதிரியான மெல்லிய இசையை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றபோது உங்கள் கண்கள் உறக்கத்தை தானாகவே தழுவிக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால்தான் சிறுவயதில் தாலாட்டுக்கேட்டதும் உறக்கத்தில் ஆழ்ந்தோமோ என்னவோ!

உங்கள் சுவாசத்தில் கவனத்தை செலுத்துங்கள்.தூக்கம் வராமல் புரள்கின்ற வேளையில் உங்கள் சுவாசத்தைப் பற்றி கவனம் செலுத்துங்கள். அதற்கு ஒரு சின்ன பயிற்சி இருக்கின்றது,முதலில் மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளுங்கள்.சிறிது நேரம் கழித்து வெளிவிடுங்கள், இதை தொடர்ந்து செய்துகொண்டிருங்கள் ஒரு கட்டத்தில் உங்களை அறியாமல் உறங்கியே போய் விடுவீர்கள்.