" "" "

முதல் முறை வெளியாகி உள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உண்மையான வயது..!! விக்னேஷ் சிவனை விட இத்தனை வயது மூத்தவரா நயன்தாரா..

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் அனைவரும் அறிந்தது தான். ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்த நயன்தாராவை நல்ல நண்பனாக இருந்து தேற்றிய விக்னேஷ் சிவன் அவரை முழுமையாக புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆரம்பத்தில் நயன்தாரா காதலுக்கு நோ சொன்ன போதும் பின் விக்னேஷ் சிவனின் அன்பை புரிந்துகொண்டு காதலை ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணம் இந்த வருடம் நடக்கவிருந்த நிலையில் நோய் தொற்று காரணமாக இது தள்ளிப் போனது.

இந்த நிலையில் அண்மையில் நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உண்மையான பிறந்த திகதி மாதம் ஆகியவை வெளியாகி உள்ளது. இது வரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சரியான பிறந்த திகதி ஆண்டு அவரது ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ஏ ஆர் ரஹ்மானினால் தெரியவந்துள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் ரஹ்மான் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவனிடம் நீங்கள் 1984 பிறந்தவரா என ரஹ்மான் கேட்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் இல்லை நான் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தேன் என்கிறார்.

பேட்டி ஒன்றில் நயன்தாரா தனது பிறந்த நாள் 1984 நவம்பர் மாதம் 18தேதி என்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா ஒரு வயது பெரியவர் என கூறி வருகின்ற நிலையில் சிலர் இல்லை 10 மாதங்கள் மட்டுமே மூத்தவர் என கூறி வருகின்றனர்..!!