இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவிப்பு..!!

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விஜயம் செய்யவுள்ளார். அவரது இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா அல்லது ஆகாதா என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் எட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதே வேளையில், திருப்திகரமானதாக இல்லாவிட்டால், ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.