ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்..!!

ஈராக்கில் முகாம் அமைத்துள்ள அமெரிக்க படைகளை தாக்கியதால், ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார். சமீப காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இராணுவ முகாம்களை, ஈரான் தாக்க திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.