பிரான்ஸில் கொரோனாவால் பலியான யாழ். இளம் குடும்பப் பெண்…!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

யாழ்ப்பாணத்தில் நீராவியடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய உமாசுதன் சாம்பவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர், தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உலகெங்கிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன், வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களும் உயிரிழந்து வருகின்றார்கள். இதேவேளை, அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.