99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பறந்த பாகிஸ்தான் விமானம் கீழே விழுந்து நொருங்கியது!

99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பறந்த பாகிஸ்தான் விமானம் கீழே விழுந்து நொருங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், லாகூர் நகரில் இருந்து வர்த்தக தலைநகரான கராட்சிக்கு பயணித்துள்ளது. அந்த விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். கராச்சியில் விமானம் தரையிறங்க முற்பட்ட போது, குடியிருப்பு காலனிப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில், குறித்த விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.