சொந்தமாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க தீர்மானித்த ரஷ்யா.!!
தற்போதைய சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததும், தானே சொந்தமாக ஒரு விண்வெளி மையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ் தயாரித்துள்ள திட்ட அறிக்கையில், தற்போதைய விண்வெளி மையம் கடந்த 20 வருடங்களை தொடர் பராமரிப்பில் இருந்து வருவதால் அடுத்த 10 வருடத்திற்குள் புதிய மையம் கட்டியமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே புதிய விண்வெளி ஆய்வு மையத்தை தனது சொந்த செலவில் ரஷ்யா கட்டவேண்டும் என்றும், இதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று குறிப்பிட்டுள்ள ரோஸ்காஸ்மோஸ், ரஷ்யா கட்டியமைக்கும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய சுற்றுப்பாதையை உருவாக்கவும், செவ்வாய், சந்திரன் போன்றவற்றிற்கு செல்லும் விண்கலனுக்கு எரிபொருள் நிரப்பும் மையமாகவும் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளாக திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.