google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

கொடிய கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால், கொரோனா வைரஸுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இதே வேண்டுகோளை அந்த நாட்டு மக்களிடத்தில் முன் வைத்துள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும், சினிமா தியேட்டர்கள், பள்ளிகள் , கல்லூரிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சுமார் 22 கோடி மக்கள் தொகையுள்ள பாகிஸ்தானில் 76, 160 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,543 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த நாட்டின் பெருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி பேர் இந்த நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். 2.5 கோடி மக்கள் தினக் கூலிகள். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் மக்களிடத்தில் இம்ரான்கான் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது,’ மக்கள் கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று இம்ரான் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிக்கையில், ” பாகிஸ்தானில் ஊரடங்கு சட்டம் காரணமாக 13 முதல் 15 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய மக்களுக்கு கையில் பணம் கொடுப்பது என்பது இயலாத காரியம். பணம் கொடுக்கும் நிலையிலும் அரசு இல்லை. அப்படியே கொடுத்தாலும் எத்தனை காலம் கொடுத்து விட முடியும். முன்பை விட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிகமாக ஏற்படும் உயிரிழப்புகள் எனக்கு வருத்தத்தை உருவாக்கியுள்ளது. வைரசுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள். உங்களையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ” என அவர் கூறியுள்ளார்.