google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாயை மூடுங்கள் என கூறிய பொலிஸ் அதிகாரி!

அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் சர்ச்சை பேச்சை பொலிஸ் அதிகாரி ஒருவர் விசனமடைந்து ட்ரம்பை வாயை மூடுமாறு தெரிவித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளோயிட் என்ற கறுப்பினத்தவரை அந்த மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் அவர் உயிரிழந்தார். பொலிஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் ஆரம்பித்தது. அதையடுத்து நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஆளுநர்களை சாடியுள்ளார். கலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்த தவறியதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் இராணுவத்தை கூட களம் இறக்குவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என கூறினார். ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த பேச்சை பொலிஸ் அதிகாரி ஒருவர் டிரம்பை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் கூறியதாவது,

ஜனாதிபதி டிரம்பால் ஆக்கபூர்வமாக ஏதும் செய்ய இயலவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். இது ஆதிக்கம் செலுத்தும் நேரமில்லை. இந்த நேரத்தில் பலத்தை காட்டுவது தலைமைக்கு அழகல்ல. இது ஹொலிவுட் படம் அல்ல நிஜ வாழ்க்கை என கடுமையாக பேசியுள்ளார்.