google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

முன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி கொடுத்த டோனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பை பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு டிரம்ப் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். மக்களை ஒன்று சேர்க்கப்பாடுபடாது பிரித்தாளும் ஓர் அமெரிக்க ஜனாதிபதியை முதன் முதலாக டிரம்ப் ரூபத்தில் சந்திக்கிறேன் என்று ஜேம்ஸ் மேட்டிஸ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அந்த பேட்டியில் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்திருப்பதாவது,

“மக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சி போல் பாசாங்கு கூட செய்யவில்லை டிரம்ப் மாறாக மக்களை பிரிக்க அவரே முயற்சிக்கிறார். அவரது அத்தகைய 3 வருட கால விளைவுகளை தான் இப்போது பார்க்கிறோம். 3 வருடங்களாக ஒரு முதிர்ச்சியற்ற தலைமையின் செயல்களைப் பார்த்து வருகிறோம். அவர் இல்லாமலேயே நாம் ஒற்றுமையுடன் இருப்போம், நம் சிவில் சமூகத்தின் வலுவான தன்மையினால் நாம் ஒற்றுமையுடன் இருப்போம்” என்று பேசியிருந்தார்.

இதற்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த ஜனாதிபதி,

“எனக்கும், பராக் ஒபாமாவுக்கும் ஒரே விஷயத்தில் ஒத்துப் போகும் என்றால் அது ஜேம்ஸ் மேட்டிஸை நீக்கியதில் தான். உலகிலேயே அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு ஜெனரல் மேட்டிஸ். நான் அவரது ராஜினாமா கடிதத்தைக் கேட்டேன் அது தொடர்பில் எனக்கு மிகவும் பிரமாதமான உணர்வே உள்ளது. அவரது முதன்மை பலம் இராணுவம் அல்ல, தனிப்பட்ட பொது உறவுகளே. அவரை எனக்குப் பிடிக்காது, அவரது தலைமையையும் எனக்குப் பிடிக்காது, எனக்கு அவரிடத்தில் பிடிக்காதது நிறையவுள்ளது. நல்ல வேளையாக அவர் பதவியில் இல்லை.” என்று கூறியுள்ளார்.