தன் உயிரைப் பற்றி கொஞ்சம் கூட நினைக்காமல் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன்..!! மருத்துவமனையில் கவலைக்கிடம்!

தீ விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தம்பதியினரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த 32 வயதுடைய அனில் நினன் என்பவர் தனது மனைவி நீனுவுடன் ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஒரு அழகான மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 09 ஆம் திகதி அன்று அவர்களுடைய வீட்டின் மின்சாரப் பெட்டியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது வேட் ரூமில் இருந்த அனிலில் மனைவி நீனுவின் அலறல் சத்தம் கேட்டு தலை தெறிக்க அனில் ஓடி வந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பின்னர் கட்டிய மனைவியை காப்பாற்ற முயன்ற போது தீ பிழம்புகள் முழுவதும் அவர் மீது பாய்ந்துள்ளது. அதில் படுகாயம் அடைந்த அனில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் உயிருக்கு போராடுவதாகவும், அவருடைய மனைவி 10 சதவீத தீக்காயங்களுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் நெருக்கமான உறவினரான ஜூலை, பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

மேலும் இந்த நிலையில் குறித்த தம்பதியினர் இருவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.