ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலிலுள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..!!

ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பலில், 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட 3700 பேர் சிக்கியுள்ளனர். அந்த கப்பலிலுள்ளவர்களில் முதலில், 10 பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பின்னர் 60 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதாக அதிகாரிகள் கூறியிருந்தார். இது போன்ற நிலையில், இந்தியர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டனர். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஐ.நாவின் குழுவிற்கு அந்த வீடியோ டிவிட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த கப்பலிருந்த தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர், தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அவர் அதில் “ இது வரை இந்தியர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை” என்று குறியியிருந்தார். தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஜப்பான் அரசிடம் பேசி இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்தியர்களுக்கு கொடிய கொரோனா வைரஸ் உள்ளதா என்று சோதித்ததில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஆகவே இந்தியர்கள் மீட்கப்படுவார்களா அல்லது நோயின் தாக்கம் குறைந்த பின் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுவார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.