" "" "

பட்டமளிப்பு விழாவில் உயிருள்ள பாம்புகளையும், முயல்களையும் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய குர்திஷ் இராணுவ படை வீராங்கனைகள்..!!!

குர்திஷ் இராணுவப் படை வீராங்கனைகள் தங்கள் பயிற்சிகளை முடித்து விட்டு பட்டம் பெறும் பட்டமளிப்பு விழாவின் போது உயிருள்ள பாம்புகளையும், முயல்களையும் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் பட்டம் பெற்றதும் தங்கள் தொப்பிகளை கழற்றி வீசுவது போல, Peshmerga என்னும் படைப்பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு இப்படி செய்வது பாரம்பரியமாம்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக போராடியதில் இந்த பெண்களின் பங்கு முக்கிய இடம்பெற்றது.
போரின் போது இந்த பெண்களை முன் வரிசையில் நிறுத்திவிடுவார்களாம். அவர்களைப் பார்த்ததும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயந்துவிடுவார்களாம். காரணம், ஒரு பெண்ணால் கொல்லப்பட்டால், சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை நிலவுவதால் தான் அவர்கள் இந்த வீராங்கனைகளைக் கண்டால் தலை தெறிக்க ஓடுவார்களாம்.