சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு பலமடைந்து காணப்படுவதாக பிரதியமைச்சர் ஷாங் சூ தெரிவிப்பு…!!

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு பலமாக இருப்பதாக சீனாவின் கலாசாரத்துறை பிரதியமைச்சர் ஷாங் சூ தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான சுற்றுலாத்துறை தொடர்பான ஒத்துழைப்பு குழுக் கூட்டம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சீனாவின் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், ரஷ்யாவுடனான உறவு முன்னரை விட இப்பொழுது அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது சிறந்த தலைவர்களை கொண்டுள்ளது.
ரஷ்யா மற்றும் சீனா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றதாக கூறினார். இந்த ஆண்டு ரஷ்யா தலைநகர் மொஸ்கோவிற்கும் பீஜிங்கிற்குமான தூதரக உறவுகள் ஆரம்பமாகி 70 ஆண்டுகள் ஆவதாகவும் சீனாவின் கலாசாரத்துறை பிரதியமைச்சர் ஷாங் சூ தெரிவித்தார்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!