அசர வைத்த பிரமாண்ட மலர்!

உலகையே அசர வைக்கும் வகையில் மிகப் பெரிய பூ ஒன்று இந்தோனேசியாவில் மலர்ந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

4 அடி அகலமுடைய பிரமாண்டமான தோற்றத்தில் உள்ள இந்தப் பூ ரப்லேசியா அர்னால்டி என்ற பெயருடையது.

இந்தோனேசியாவின், சுமத்ராத் தீவில் மலர்ந்துள்ள இந்தப் பூவே, உலகில் மலர்ந்த பூக்களில் மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்தப் பூ, பிண மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இந்தப் பூவின் அழுகிய தண்டுப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பூவை மலரச் செய்யும் செடிகள், ஒட்டுண்ணி தாவர வகையைச் சேர்ந்தது. இதற்கு வேர்களோ, இலைகளோ கிடையாது. அத்துடன், வேறொரு தாவரத்தில் தங்கி வளரும் இந்தச் செடிகள், மலர்கள் மலர்ந்து வெளியே வரும் போதுதான், அவை மற்றொரு தாவரத்தில் வளர்ந்துள்ளதே தெரியவரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பூ உலகிலேயே மிகப்பெரியதாக இருந்தாலும், ஆயுட்காலம் ஒருவாரம் என்பது அதிர்ச்சிக்குரிய விடயம்.