பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு வந்த நெருக்கடி..!!!

பிரித்தானியாவின் புதிய பிரதமரால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஷிட் யோசனையும் நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஜேர்மனியின் ஜனாதிபதி அஞ்சலா மேர்க்கல் மற்றும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த தகவல் வெளியானது.

மேலும் இந்த மாத இறுதியுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்கான உடன்பாட்டு யோசனையை பொரிஸ் ஜொன்சன் முன்வைத்திருந்த நிலையில், குறித்த யோசனையை அஞ்சலா மேர்க்கல் எதிர்த்திருப்பதாக தெரிவிக்கிறது.

அதை தொடர்ந்து வடக்கு அயர்லாந்து சுங்க மையமாக செயற்படும் வகையிலான திட்டம் முன்வைக்கப்படாத நிலையில் ப்ரெக்சிட் இணக்கப்பாட்டுக்கு சாத்தியம் இல்லை என்று அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது