google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

மனிட்டோபாவின் ஏற்பட்ட விமான விபத்து..!!!

மனிட்டோபாவின் கிழக்குப் பகுதியில் விமான விபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் மூன்று பேர் மயமாகியுள்ளனர். இவர்கள் மூவரையும் தேடும் பணிகள் தாமதடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வானிலை மிகவும் மோசமாக இருப்பதால், மூவரைத் தேடும் பணிகள் தாமதடைந்து வருவதாக கனேடிய மத்திய பொலிஸ் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வினிப்பெக்கில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் வடகிழக்கே, கடந்த சனிக்கிழமை காலையில் விபத்துக்குள்ளான ‘de Havilland Otter’ ரக விமானம், நீர்ப் பரப்பினுள் வீழ்வதற்கு முன்னர் மரம் ஒன்றிலும் மோதுண்டதை சிலர் கவனித்துள்ளனர்.

இருப்பினும், சனிக்கிழமை பிற்பகல் வேளையில் குறித்த அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் இந்த விமானத்தின் பயணித்த மூவரின் நிலைக் குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் ஏரிப்பகுதி மற்றும் அதன் கரையோரங்களில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அதில் பயணித்த மூன்று பேர் தொடர்பில் தடயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும், நீரடி நீச்சல் மற்றும் மீட்பு படையினரின் தேடுதல்கள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.