இந்தோனேசியாவிலுள்ள மரப் பாலம் உடைந்து விழுந்ததில் 18 சிங்கப்பூரர்கள் படுகாயம்..!!!

இந்தோனேசியாவின் பாத்தாமிலுள்ள Montigo Resort தலத்தில் மரப் பாலம் உடைந்து விழுந்ததில் 18 சிங்கப்பூரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்ற அவர்கள் 70 மீட்டர் மரப்பாலத்தின் மீது ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அதன் நடுப்பகுதி உடைந்து விழுந்துள்ளது. 30 பேருக்கு அதிகமானோர் கடலில் விழுந்துள்ளார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

சிங்கப்பூரர்கள் 13 பேர் பாத்தாமிலுள்ள பயாங கரா மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதோடு 5 பேர் இலேசான காயங்களுக்காக சிகிச்சை வழங்கப்பட்டதாக இந்தோனேசிய ஊடகம் கூறியுள்ளது. மரப்பாலம் உடைந்து விழுந்தது தொடர்பாக தனக்குத் தெரியவந்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாத்தாமிலுள்ள சிங்கப்பூர் துணைத்தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று உரிய உதவிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.