ஜெர்மனியின் லூப்தான்ஸா விமான நிலையத்தின் ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக 700 விமானங்கள் ரத்து…!!!!!

நேற்றைய தினம் ஜேர்மானியின் பிரபல விமான நிறுவனமான லூஃப்தான்ஸா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை விடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

இந்த காரணமாக லூப்தான்ஸா நிறுவனத்தின் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேர்மானியின் மிகப்பெரிய விமான நிறுவனமாக லூஃப்தான்ஸா காணப்படுவதோடு பல நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் இந்த நிலையில் அந்நிறுவன ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் 700 விமானங்களை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.

அந்த வகையில், பிராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் 400 விமானங்களை லூஃப்தான்ஸா ரத்து செய்ததோடு, முனிச் விமான நிலையத்தில் 250 விமானங்களும், மேலும் சில சிறிய விமான நிலையங்களில் 50 வரையிலான விமானங்களும் லூஃப்தான்ஸா நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. அந்த காரணத்தால் லூஃப்தான்ஸா நிறுவன விமானங்களில் செல்வதற்கு முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!