அவுஸ்திரேலியாவில் பலத்தக் காற்று வீசியதால் சிட்னி விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகள் ரத்து..!!
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று அவுஸ்திரேலியாவில் வீசிய பலத்த காற்று வீசியுள்ளது. இந்த பலத்த காற்றால் சிட்னி விமான நிலையத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமான தடை காரணத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். அனைத்துலக விமானச் சேவைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று சிட்னி நகரை இன்று அலைக்கழிக்கும் என அஞ்சப்படுகிறது.