நியூ ஆர்லியன்ஸில் நடந்த துப்பாக்கி பிரயோகம்..!!!

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நியூ ஆர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பவம் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணி வரை நடைபெற்றுள்ளதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் படுகாயமடைந்த 5 பேர் நியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையிலும், ஏனைய 5 பேர் துலேன் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன. அதிகளவான சனத்தொகை இருந்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்த நிலையில் பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.