சவுதி அரேபியாவின் இராணுவ ஹெலிகாப்டர் சுட்டு விழுத்தியது நாங்கள் தான் ஆதாரத்தோடு வெளியிட்ட ஹவுத்தி போராளிகள் குழு…!!!

சவுதி அரேபியாவின் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்த ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு, அண்மையில் அதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சவுதி அரேபியாவின் தென்மேற்கிலுள்ள அசிர் பகுதியில் அந்நாட்டிற்கு சொந்தமான இராணுவ அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தாகவும் ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு கூறியிருந்தனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

04 வருடங்களுக்கு மேலாக ஏமனில் ஹவுத்தி குழுவுடன் போராடி வரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தரப்பில் இருந்து தற்போது வரை இந்த தாக்குதலை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இந்த நிலையில், தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், ஹவுத்தி போராளிகள் குழு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை வெளியிட்டன. அதில், ஹெலிகாப்டர் பறந்துக்கொண்டிருக்கும் போது திடீரென தாக்கப்பட்டு தீப்பிடித்து எரித்து தரையில் விழுந்து நொறுங்குகிறது.

Videos & Video Copyrights Owned By: الإعلام الحربي اليمني

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.