கன மழை மற்றும் பலத்த காற்றுடன் பிலிப்பைன்சை புரட்டி எடுத்த கமுரி சூறாவளி…!!!! 340,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம..!!

பிலிப்பைன்ஸை பலத்த காற்று மற்றும் கன மழையுடன் கமுரி சூறாவளி புரட்டி எடுத்துள்ளது. இந்த சூறாவளியால் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாலை வாக்கில் துவங்கிய, கூரைகளை பெயர்த்து எடுத்த இந்த கமுரி சூறாவளி சுமார் 13 மில்லியன் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்ற மணிலாவை நோக்கி திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வானிலை ஆராய்ச்சியாளர்கள், குறைந்தபட்சம் மணிக்கு 155 கிலோமீற்றர் வேகத்திலும் மற்றும் அதிகபட்சம் மணிக்கு 235 கிலோமீற்றர் வேகத்திலும் வீசும் காற்றுகளுடன் கமுரி வலிமையுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. இன்றைய தினம் காலை 11 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை மணிலா சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக அதன் மேலாளர்கள் கூறியுள்ளனர். மத்திய Bicol பகுதியில் இருந்து சுமார் 340,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு இடையில் நேற்றுக்கு முன் தினம் ஆரம்பித்த தென் கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.