சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உணவு விநியோகச் சேவை…!!!

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உணவு விநியோகிப்பதை தடுக்க GrabFood, Deliveroo, FoodPanda நிறுவனங்கள் அவற்றின் விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வெளிநாட்டவர்கள் உணவு விநியோகத்தில் ஈடுபடுவது குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடட்டதைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு சட்டவிரோதமாக உணவு விநியோகம் செய்யும் நபர்கள் மீது சமூக வருகை அனுமதி நடைமுறையின் கீழ் (social visit pass) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2016 தொடக்கம் 2018 வரை இடைப்பட்ட கால கட்டத்தில் சட்டவிரோதமாக வேலை செய்த சுமார் 900 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.  அவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்யும் நபர்களுக்கு அதிக பட்ஷமாக 2 வருட சிறைத்தண்டனையுடன், 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று மனிதவளத்துக்கான துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.

CNA இடம் பேசிய Deliveroo நிறுவனம் அதன் உணவு விநியோக ஓட்டுநர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.    GrabFood அதன் ஓட்டுநர்களின் அடையாளத்தைச் சரிபார்த்த பின்னரே அவர்களைச் சேர்த்துக்கொள்வதாகக் கூறியது.

Foodpanda அதன் வேலை அனுமதி வழங்கும் செயல் முறையை மிக அவதானமாக கவனிப்பதாக கூறியுள்ளது. விதிமுறைகளை மீறி நடந்து கொள்ளும் ஓட்டுநர்களைத் தடை செய்வதாக நிறுவனங்கள் கூறினார்.