புற்றுநோயால் அவதிப்பட்ட மூதாட்டியைத் துன்புறுத்திய பணிப்பெண்…!!!

மியான்மாரைச் சேர்ந்த லியான் கயின் என்ற பெண் ஒருவர் வைத்தியசாலையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். குறித்த வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 67 வயதுடைய வீ கியூ ஹோயைப் என்ற மூதாட்டியை பராமரிக்கும் பொறுப்பு பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த பணிப்பெண் தன்னை துன்புறுத்தி வருவதாக மூதாட்டி மகனிடம் கூறினார். கண்காணிப்புக் கேமராக்களில் பணிப்பெண் மூதாட்டியை துன்புறுத்துவது தெரியவந்துள்ளது.

மூதாட்டியின் உடலில் கிள்ளிய அடையாளங்களும் காணப்பட்டன. ஜனவரி 2ஆம் திகதி பணிப்பெண்ணின் செயல்களைப் பற்றி பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மூதாட்டி ஜனவரி 23ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர்.

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மூதாட்டி துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. வேண்டும் என்று துன்புறுத்திய குற்றத்திற்காக பணிப்பெண்ணுக்கு அதிகபட்சமாக 2 வருடம் சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.