இந்திய மொழிகள் அனைத்தையும் பின்தள்ளி முதலிடம் பிடித்து அசத்திய தமிழ் மொழி..!!

விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் ஒன்றிணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் அனைத்து இந்திய மொழிகளையும் வீழ்த்தி தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை வேங்கைத் திட்டம் 2.0′ என்ற பெயரில் விக்கிப்பீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் ஒன்றிணைந்து கட்டுரை போட்டி ஒன்றினை நடத்தியுள்ளது. அதில் ஒவ்வொரு மொழியினருக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் 300 வார்த்தைகளுக்கு எழுத வேண்டும். நேரடியாக கூகிள் மொழிபெயர்ப்போ அல்லது இதர எந்திர மொழிபெயர்ப்போ பயன்படுத்தக் கூடாது என்பதே போட்டியின் விதியாகும்.

கடந்த வருடம் முதல் முறையாக நடத்திய போட்டியில் பன்னிரண்டு மொழியினர் போட்டியிட்டனர். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடம் தான் பெற முடிந்தது. பஞ்சாபி மொழி முதலிடம் பிடித்தது. இது தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களுக்கிடையே வருத்தத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடந்த போட்டியில் தமிழ் மொழியானது, இந்திய மொழிகள் அனைத்தையும் பின்தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.