கலிபோர்னியாவில் ஒரு குடும்பத்தை காப்பாற்றிய போத்தல்…!!

கலிபோர்னியாவில் Arroyo Seco நதியோரமாக கர்டிஸ் விட்சன் என்பவரின் காதலி மற்றும் மகன் ஆகிய மூன்று பேரும் நடந்து கொண்டிருந்த நிலையில் அருவியில் இருந்து கயிறு வழியாகக் கீழே இறங்கி அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு அந்த வழியாக சென்ற போது  பள்ளத்தாக்கில் அவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அருவியில் இருந்து கீழே இறங்குவதற்கு கயிறு எதுவும் இல்லாத நிலையில் உதவிக்கு யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விட்சன் தம் பையில் இருந்த துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து அதில் அவர்கள் சிக்கியிருக்கும் விவரத்தை எழுதி காலி போத்தலினுள் வைத்தார். பின்னர் அந்தப் போத்தலின் வெளிப்புறத்தில் “help” என்ற சொல்லையும் எழுதி போத்தலை அருவியின் நீரில் மிதக்கவிட்டார்.

சுமார் 400 மீட்டர் தொலைவில், நதி வழியாக நடந்து கொண்டிருந்த இருவர் போத்தலைக் கண்டெடுத்தனர். ஒரு சில மணிநேரங்களுக்குப் பின்னர் மீட்புப் பணியினர் விட்சன் குடும்பத்தைக் கண்டுபிடித்தனர். மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

எங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்து சந்தோசம் அடைவதாகவும், தமக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி கூற விரும்புவதாகவும் விட்சன் கூறினார்.