" "" "

“என்னை பெற்ற தாய் ஏன் எனக்கு இப்படி செய்தார்.!?” லண்டனில் இருந்து தாய்க்காக நாடு திரும்பிய பெண்.! பின் கிடைத்த ஏமாற்றம்..வைரலாகும் வீடியோ.!!

தன்னை பெற்ற தாய் தந்தையரை தேடி அலைந்து மனம் உடைந்த பெண் பெண் ஒருவர் கதறி அழுத வீடியோக்களை மனதை உருக வைத்துள்ளது. 1980களில் பணி நிமித்தம் இலங்கையில் இருந்த ஜோடி டொனால்ட் மற்றும் யசந்தா தம்பதி. இவர்களுக்கு குழந்தைகள் இருக்கவில்லை, அதனால் சோகத்தில் இருந்த போது 3 மாத குழந்தை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் குழந்தையை கொடுக்க விரும்புவதாகவும் கேள்விப் பட்டுள்ளனர்.

இதன் போது பணத்தை கொடுத்து குழந்தையை தத்தெடுத்ததுடன் குழந்தைக்கு யாஷிகா என பெயர் வைத்தனர். பின் 80களின் இறுதியில் பிரித்தானியாவிற்கு சென்று விட்டனர். 18 வயது வரை மகளிடம் எதுவும் சொல்லவில்லை. 18 வயதை கடந்தவுடன் யஷிகாவின் சொந்த தாய் தந்தை பற்றி கூறியுள்ளனர். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத யஷிகா என் அம்மா அப்பா நீங்கள் தான் என இருந்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

யஷிகாவிற்கு திருமணமானது 31 வயதில் குழந்தைக்கு தாயாகி உள்ளார். அந்த குழந்தையின் அனைப்பு ஸ்பரிசம் மிகவும் பிடித்து போக இந்த வயதில் தானே என்னை கொடுத்தார்கள். எப்படி குழந்தையை கொடுக்க முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை தனது வளர்ப்பு தாயிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் குழந்தையை கொடுக்கும் போது பெண் ஒருவர் அழுதார், கண்டிப்பாக உன் தாயாக தான் இருக்கும் அது என கூறினார். இதனை தொடர்ந்து தனது கணவர் மற்றும் மகள் இவானியுடன் தாயை தேடி இலங்கை சென்றார் யஷிகா அங்கு தாயை தேடுவது இலகுவாக இருக்கவிலை.

தத்துக் கொடுத்த தேவாலயம், அது தொடர்பான இடங்கள் என நண்பர் ஒருவரின் உதவியுடன் 3 மாதங்கள் தேடியும் தோற்றுப் போனார்கள். மீண்டும் பிரித்தானியா செல்ல வேண்டிய சூழ் நிலை ஏற்பட சென்று விட்டனர். ஆனால் இலங்கையில் இருந்த நண்பர் மூலம் தேடிக்கொண்டே இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் தாயை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கைக்கு வர முடியாததால் வீடியோ கல் மூலம் பேசி தனது குழந்தைகளை பெற்றோருக்கு காட்டியுள்ளார் யஷிகா. இந்த வீடியோக்கள் பிரபல சிங்கள தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாக உள்ளது.!!