கடந்த வருடத்தின் ஒட்டுமொத்த விருதுகளையும் அள்ளிய நடிகர் அஜித்..! இவ்ளோ விருதுகளா.!? கொண்டாடும் அஜித் ரசிகர்கள்..!!

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின. அதில் ஒரு சில திரைப்படங்களை தவிர மற்றைய திரைப்படங்கள் அனைத்தும் அதிகம் பேசப் பட்டது. குறிப்பாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விட கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி, தனுஷ் நடிப்பில் அசுரன், ஜோதிகா நடிப்பில் தம்பி, உறியடி, மான்ஸ்டர், கோமாளி, கடாரம் கொண்டான், போன்ற திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கடந்த வருடம் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களும் வெளியானது. இதில் பிகில் வசூல் சாதனை செய்தது. இருப்பினும் அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் பிரபல தொலைகாட்சியான ஜீ தமிழ் விருது விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தியது. இதில் சினிமா துறையை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். இதன் போது. கடந்த வருடத்திற்கான பல விருதுகளை அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் பெற்றுக் கொண்டது.

இதில் விஸ்வாசம் படம் சிறந்த பாடகர், பாடலாசிரியர், பேவரட் படம், பேவரட் இசையமைப்பாளர், பேவரட் ஹீரோயின் போன்ற விருதுகளை அள்ளியது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.!