" "" "

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாசப் போராட்டம்..! 29 நாட்கள் தாயான பெண்ணின் கண்ணீர் நிமிடங்கள்..!

கொரோனா வைரஸினால் பலர் தங்கள் உறவுகளை இழந்தாலும் சிலருக்கு புதிய உறவுகள் கிடைத்துள்ளது. அண்மையில் கிடைத்த உறவு பிரிந்து சென்றதால் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கேரளாவின் கொச்சியில் இடம்பெற்றுள்ளது. கொச்சியை சேர்ந்த ஷீனா என்ற பெண் செவிலியராக ஹரியானாவில் பணியாற்றி வந்த நிலையில் தனது குழந்தையுடன் சொந்த ஊரான கொச்சிக்கு திரும்பியுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

விஷேட விமானம் மூலம் வந்த இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப் பட்ட போது ஷீனாவிற்கு கொரோனா உறுதியானது. ஆனால் இவரது 6 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை, இதனால் குழந்தையை பராமரிக்க ஒருவர் தேவைப் பட்டனர். இதனை அறிந்த சமூக ஆர்வலரான மேரி அனிதா குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்.

எர்ணாகுளத்தை சேர்ந்த இவர் மாற்றுத்திறனாளிகள் , மற்றும் பெற்றோரால் கைவிடப் பட்ட குழந்தைகளுக்கு உதவி வருவதுடன் பேரிடர் நிவாரண அமைப்பின் உறுப்புனராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 6 மாத குழந்தையை வளர்க்க மேரி அனிதா முடிவு செய்ததை அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து ஷீனா மற்றும் அவரது கணவர் எல்தோஸ் இருவரும் கொரோனா சிகிச்சை எடுத்து வந்தனர்.

29 நாட்கள் சிகிச்சையின் பின் தாய் ஷீனா குணமடைந்தார். இவர் தனது ஆறுமாத குழந்தையை 7 மாத குழந்தையாக அனிதாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஷீனா மகிழ்ச்சியாக இருந்த போதும் அனிதாவால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

29 நாட்கள் என்றாலும் தன் குழந்தை போல் வளர்த்ததால் குழந்தையை பிரிய முடியாத வேதனையில் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!