மதுபாலா, ஜோதிகா, சிம்ரனை தொடர்ந்து சினிமாவிற்கு ரீ எண்ட்ரீ கொடுக்கும் பிரபல நடிகை..!
புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்துகொண்டதும் நடிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அவர்களில் சிலர் மட்டுமே சில வருடங்களின் பின்னர் மீண்டும் நடிப்புக்கு வருகின்றார்கள்.
ஜோதிகா, மதுபாலா, சிம்ரன் இப்பிடி நீளும் வரிசையில் புதிதாக இணைந்து கொள்கிறார் நஸ்ரியா நசீம்.
மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்ட நஸ்ரியா நீண்ட நாட்களின் பின்னர் கணவர் பகத் நடிக்கும் படம் ஒன்றில் நடிப்பதன் மூலம் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார்.
டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார். இன்று இணையத்தில் வைரலாகி வரும் இப் புகைப்படமானது அவரது ரசிகர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியும் கோபமும் அடைய வைத்திருக்கின்றது.