பீட்டர் பாலால் வனிதாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்..! வாழ்த்தும் ரசிகர்கள்…!!
சினிமா செய்திப் பக்கங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் எல்லா பக்கத்திலும் வனிதாவின் மூன்றாவது திருமண விடயங்களே பேசப் பட்டுக் கொண்டிருக்கின்றது. வனிதா திடீரென மூன்றாவது திருமணம் செய்ததில் இருந்து பல பிரச்சனைகளை வனிதா சந்தித்து வருகிறார்.
என்ன பிரச்சனை வந்தாலும் வனிதா கூலாக தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார். அண்மையில் வனிதா பீட்டர் பாலுக்கு முத்தம் கொடுத்தது, பீட்டர் வனிதாவின் மகளை அணைத்துக் கொண்டிருந்தது எல்லாமே சர்ச்சையானது, ஆனால் இதை எதனையும் வனிதா கண்டுகொள்ளாமல் யூடியூப் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வனிதா வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு நன்றி இத்தனை பிரச்சனைகளிலும் எனக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள். உங்களால் தான் எனது யூடியூப் சேனலில் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
ஒரு சிலரின் திட்டல்களால் நான் சோர்ந்து போகாமல் இருப்பதற்கு ரசிகர்களின் ஆதரவு தான் உதவுகிறது. பீட்டர் பால் வந்தது என் வாழ்வின் அதிர்ஷ்டம் தான் என தெரிவித்துள்ளார்..!!