ரொமாண்டிக் ரவுடியாக களமிறங்கும் யோகி பாபு..! என்ன திரைப்படத்தில் தெரியுமா.!?

நகைச்சுவை நடிகராக ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியை வகுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்ட யோகி பாபு இன்று கதையின் நாயகனாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் யோகி பாபு நடிக்கும் அடுத்த படம் 50/50.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

லிபி சினி கிராப்ட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபுவுடன் சேது, நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று நட்சத்திர காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு திகில் நிறைந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் எனவும் இயக்குனர் கிருஷ்ண சாய் தெரிவித்துள்ளார்.