" "" "

7 மாத குழந்தையை கர்ப்பத்தில் சுமந்த படி சாண்டியின் இரண்டாவது மனைவி செய்த செயல்.! திட்டி தீர்த்த ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு அவர் சொன்ன பதில்.!!

7 மாத கர்ப்பமாக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா என சாண்டி மாஸ்டரின் இரண்டாவது மனைவியான சில்வியாவை ரசிகர்கள் திட்டி தீர்த்த நிலையில் அதற்கு சில்வியா அளித்த பதில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைகாட்சியில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவுடன் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி மாஸ்டர்.

சில திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய சாண்டி சொந்தமாக நடன பள்ளி நடத்தி வருகிறார். பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட இவர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். சாண்டி ஏற்கனவே நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார்.

பின்னர் தனது தோழியான சில்வியாவை திருமணம் செய்து இவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் சில்வியா. 7 மாத கர்ப்பமாக இருக்கும் இவர் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மிக மோசமாக திட்டி தீர்த்தனர்.

அந்த வீடியோவை உடனடியாக டிலிட் செய்த சில்வியா குறித்த டான்ஸ் ஆனது டாக்டர்களின் அறிவுரை பெற்று செய்ததாகவும், இதனால் குழந்தை ஆரோக்கியமானதாக பிறக்கும் என்றும் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தையை கவனமாக பாதுகாத்துக் கொள்ளும் படி கூறி வருகின்றனர்.!!