” இதை மட்டும் செய்தால் போதும் திரிஷாவுடன் ஒரு நாள் முழுவதும் நீங்களும் டேட்டிங் செல்லலாம்.” நடிகை திரிஷா ரசிகர்களுக்கு வைத்துள்ள போட்டி..!!
தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாகவே நடித்து வருபவர் நடிகை திரிஷா. மற்றைய நடிகைகள் அனைவரும் வெறும் 10, 15 வருடத்திற்குள் அம்மா அக்கா என மாறி வரும் நிலையில் தொடர்ந்து இத்தனை வருடங்கள் குவியும் வாய்ப்புகளுடன் இருக்கிறார்.
அத்துடன் திரிஷா நடித்த கதாபாத்திரங்களான, வெரோனிகா, ஜெஸ்ஸி, அபி, ஜானு போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் இடையே கொண்டாடப் படுகின்றது. இடை இடையே திரிஷா மீதான சர்ச்சைகள் எழுந்தாலும் அவற்றை கடந்து பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டில் இருக்கும் திரிஷா ரசிகர்களுக்கு போட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் ” என்னுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் செய்ய ரசிகர்கர்களில் ஒருவருக்கு வாய்ப்பு தருகிறேன் ” அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
என்னை பற்றியும் என்னுடன் நீங்கள் டேட்டிங் செய்யப் போகும் நாளை வீணடிக்காமல் செய்யப் போகும் செயல்கள் பற்றியும் குறிப்பிட்டு 500 வார்த்தைகளுக்கு அதிகமாகாமல் எனக்கு அனுப்புங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்ததும் பலர் கட்டுரை எழுதி அனுப்ப ஆரம்பித்து விட்டனர். திரிஷா பற்றி எழுதி திரிஷாவுடன் டேட்டிங் செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்காது சாமியோ… கிடைக்கவே கிடைக்காது..!!