பிக் பாஸ் வீட்டை விட்டு சற்றுமுன் வெளியேற்றப் பட்ட போட்டியாளர்.! இவரும் போய்விட்டாரா என சோகத்தில் அவரது ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 50 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கமலஹாசன் இன்றி முதல் நிகழ்ச்சி நடந்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் ஐந்தாவது சீசனில் கமலஹாசன் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள கமலஹாசனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாததால் வீடியோ அழைப்பின் மூலம் போட்டியாளர்களுடன் பேசினார். பின்னர் புதிய தொகுப்பாளரை அறிமுகப் படுத்திவிட்டு செல்ல நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
நேற்றும் இன்றும் அசத்திய ரம்யா கிருஷ்ணன், யாரும் வெளியேற மாட்டார் என்று நினைக்காதீர்கள் இன்றும் வெளியேற்றம் இருக்கு என்று கூறி விட்டு வெளியேற்றத்தை அறிவித்தார். தாமரை செல்வி அல்லது நிரூப் செல்வார்கள் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் மக்களுக்கு ஐக்கி பெர்ரியை பிடிக்காமல் இருந்தாலும் கடந்த சில நாட்களாக பிடித்திருந்தது குறிப்பிட தக்கது!!