இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சுவையான பொடி செய்வது எப்படி?.. இதோ உங்களுக்காக!
இட்லி என்றதும் அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு சாம்பாரோசட்டினியோ செய்வோம். அதற்கும் மேலதிகமாக நீங்கள் செய்த சூா்ாரான இட்லிக்கு இன்னும் சுவை சேர்க்க இட்லிப் பெடியும் செய்து கொள்ளலாம். அந்த இட்லிப் பொடியைக் கடையில் காசு செலவளித்து வாங்குவதை விட வீட்டிலேயே தயாரிப்பது சுவையும் ஆரோக்கியமும் கூட.
அந்த இட்லிப் பொடியை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்கலாம்.
பின்வரும் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
- உளுத்தம் பருப்பு – கால் கிலோ
- கடலை பருப்பு – 100 கிராம்
- கட்டி பெருங்காயம் – 5 கட்டி
- வெள்ளைப் பூண்டு – முழுதாக ஒன்று
- கறிவேப்பிலை – 10 கொத்து
- வரமிளகாய் – 30 எண்ணிக்கை அல்லது காரத்திற்கேற்ப
- உப்பு – தேவைக்கு
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து, அதில் கடலை பருப்பு சேர்த்து லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அதன் பின் அதோடு உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதன் பின்பு கறிவேப்பிலை சேர்த்து பருப்பு வகைகள் நன்கு சிவக்க வறுக்கவும்.
கடைசியாக இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்சியில் முதலில் மிளகாயும், உப்பும் சேர்த்து பொடிக்கவும். பின் பருப்பு வகைகளை சேர்த்து கொர கொரப்பாக பொடிக்கவும்.
இனியென்ன சுவையான இட்லி பொடி தயார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”