டுவிட்டரில் மொமன்ட்ஸ் அம்சம் இனி கிடையாது!
டுவிட்ர் செயலியானது பிரபலமான ஒரு சமூக வலைத் தளமாக இருந்துவருகின்றது. பல்வேறு செலிபரேட்டிகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற இந்த டுவிட்டரில் உள்ள மொமண்ட்ஸ் என்னும் அம்சத்தை டுவிட்டர் குழுவினர் வரும் 23 ஆம் திகதியிலிருந்து நீக்கவுள்ளனர்.
டுவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்படாத அம்சங்களை நீக்கஜவிடும் வழக்கம் இருந்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனருக்கு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்திற்கான ட்விட்டர் செயலிகளில் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.
டுவிட்டர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் 2016 ஆம் ஆண்டில் இல் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. மொமன்ட்ஸ் பதிவிடும் அம்சம் நீக்கப்பட்டாலும், அதனை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மொமன்ட்ஸ்-ஐ உருவாக்க கிரியேட் நியூ மொமன்ட் ஆப்ஷனை கிளிக் செய்து மொமன்ட் பெயர் மற்றும் விவரங்களை பதிவிட வேண்டும்.
மொபைல் செயலியில் இரந்து மட்டும்தான் இது நீக்கப்படவதாகவும் பயனர்கள் டெஸ்க்டாப் பதிப்பில் இருந்து மொமன்ட்ஸ் அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். மொமன்ட்ஸ் அம்சம் மூலம் பல்வேறு ட்விட்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட முடியும் என்பதாகவும் டுவிட்டர் குழுமம் தெரிவித்துள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”