முன்னணி ஹீரோக்களுடன் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழில் கதாநாயகியாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரதும் பாராட்டினை பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தெலுங்கு பட உலகிலும் கலக்கி வருகின்றார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தமிழில் வெளியான கனா படத்தின் தெலுங்கு பதிப்பான கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தின் மூலம் தெலுங்கு படவுலகில் காலடி வைத்தார். படம் பெரிய வெற்றியை கொடுக்காத போதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பட வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.

அண்மையில் வெளியான மிஸ் மேச் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து விஜய் தேவரகொண்டா, நானி என முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.