" "" "

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலத்தின் வீட்டில் கொண்டாட்டம்.! இந்த அழகி யாருடைய மகள் தெரியுமா.? இதோ வீடியோ.!

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக கடந்த வருடம் இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சீசன் 1 பெரிதாக பேசப் படாத நிலையில் சீசன் 2 மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தான். அனைவரும் ஒரே குடும்பம் போல் இருந்தார்கள்.

அப்பா, அம்மா, சித்தப்பா, மகன் மருமகன் என காமெடியாக இருந்தாலும் பார்க்ககூடியதாக இருந்தது. குறிப்பாக பாபா மாஸ்டரது எனர்ஜி அனைவரையும் வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அளவிற்கு ஆண்களும் சிறப்பாக சமைத்தார்கள், பாபா மாஸ்டர், அஸ்வின் இருவரும் பைனல் வரை வந்தார்கள்.

டான்ஸ் மாஸ்டரான பாபா மாஸ்டரை கண்டால் பிரபல நடிகர்களே அமைதியாகும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் குழந்தையாகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பாபா மாஸ்டர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ அவரது மகளின் சடங்கு நிகழ்ச்சி என்பதால் அட அழகாக இருக்கிறாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.!