பிக் பாஸ் வீட்டில் ஸ்கிரிப்டை மாற்றும் பாலா, ரெட் கார்ட் கொடுக்கும் எண்ணத்தில் பிக் பாஸ் குழு.!! இந்த வாரம் நாமினேஷனில் இவர்கள் தான்.!!
கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் சற்று அதிகமாகவே கடுப்பாக இருக்கிறது என்று சொல்லலாம். கடந்த சீசன்களில் யாரோ ஒருவர் சரி ரசிக்க கூடியவராக இருந்தார். ஆனால் இந்த சீசனில் அனைவருமே கோபத்தை தூண்டிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் நாமினேஷன் நடந்தது, நாமினேஷனில் பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், சுஜி, ஆரி, மற்றும் சனம்ஷெட்டி ஆகியோர் வந்தனர்.
இதில் ஒவ்வொருவரும் ஒவ்கொரு காரணம் கூறி நாமினேட் செய்தார்கள். அதில் சம்யுக்தா அனிதாவை சுடுமூஞ்சு மாக்ஸ் என நாமினேட் செய்தார், ஆரி பாலாஜியை நாமினேட் செய்யும் போது “பாலாஜியின் கண்ணை காதல் மறைக்கிறது” என்றார். இதனை கேட்டுக் கொண்டு இருந்த பிக் பாஸ் குரல் போட்டியாளர்களிடம் கொளுத்தி போட்டு விட்டார்.
மற்றவர்கள் பேசாமல் இருந்த போது கடுப்பான பாலாஜி எனக்கு இங்கு காதலும் இல்லை, ஒன்னும் இல்லை, யாராவது காதல் கீதல் என்று பேசினால் ஏதாவது சொல்லி விடுவேன் என கத்தினார். அத்துடன் ஷிவானியிடம் எனக்கு காதல் வரவில்லை, வரவும் வராது, என கூறியதுடன் வந்தால் சொல்கிறேன் என கூறினார். இந்த ப்ரோமோவை பார்க்கும் போதே புரிகிறது , பிக் பாஸ் செய்யும் எந்த சூழ்ச்சியிலும் பாலாஜி சிக்கவில்லை.
பலமுறை பாலாஜியை காதல் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்த பிக் பாஸின் முயற்சிகளை பாலாஜி கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புகள் வரும். கண்டிப்பாக காதல் என இழுத்தால் பாலாஜி திட்டி தீர்ப்பார், அதனால் பிரச்சனைகள் மறுபடியும் ஆரம்பமாகும், கண்டிப்பாக பாலாஜி இம்முறை பிக் பாஸுக்கு புதிய ஸ்கிரிப்ட் கொடுக்கப் போகிறார்.!