" "" "

பாலாஜியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி.! பிக் பாஸ் வீட்டிற்குள் வெடிக்கப் போகும் மிகப் பெரிய பிரச்சனை.! இதோ புகைப்படம்.!!

ஆண் மாடலாகவும், பெண்களின் மனதை கவர்ந்தவராகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து, பிடிவாதம், முரட்டுத் தனம் என போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யாரும் பெரிதாக பாலாஜியை வெறுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

பாலா யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை, நேற்று நடந்த மணிகூட்டு டாஸ்க் , மற்றும் தீபாவளி தினத்தன்று நடந்த டாஸ்க் போன்றவற்றில் பாலாஜி சரியாக செயற்படவே இல்லை. இதனை பார்த்தும் யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் பாலாஜியை அடக்க சிறந்த போட்டியாளர் தேவைப்பட்டார். இதனால் பிரபல தொலைகாட்சி அஸீமை தேர்வு செய்தது. தனிமை படுத்தலில் இருக்கும் அஸீம் சில அதிரடி பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதில் “நண்பனாக இருக்க தகுதி தேவை இல்லை, ஆனால் எதிரியாக இருக்க கண்டிப்பா தகுதி வேணும்” பயமா எனக்கா ஹா ஹா என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜி அஸீமின் முன்னாள் காதலி ஷிவானியுடன் சுற்றுவதால் கண்டிப்பாக மிகப் பெரிய பிரச்சனையை எதிர்பார்க்கலாம். இனி வரும் நாட்களில் பாலாஜிக்கு மிகப் பெரிய பிரச்சனை காத்திருக்கின்றது. இந்த முறை பாலாஜி சிறப்பாக விளையாடாவிட்டால் அவரை கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.!!